Sahih Muslim
274.01

No translation available for this language.

274.02

No translation available for this language.

274.03

No translation available for this language.

274.04

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் போர்) பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள், முஃகீரா! தண்ணீர் குவளையை எடுங்கள்! என்று கூறினார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்து (என் கண்ணுக்கெட்டாத தூரத்திற்குச்) சென்று என்னைவிட்டு மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றி விட்டு (திரும்பி) வந்தார்கள். அப்போது அவர்கள், கைப் பகுதி குறுகலான ஷாம் நாட்டு நீளங்கி அணிந்திருந்தார்கள். எனவே, தமது கையைச் சட்டைக் கைகளிலிருந்து வெளியே எடுக்கப்போனார்கள். ஆனால்,சட்டைக் கைகள் குறுகலாக இருக்கவே, தமது கையை அதன் கீழிருந்து வெளியே எடுத்தார்கள். நான் அவர்களின் (கை, கால்கள்)மீது தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்து)விட்டுப் பின்னர் தொழுதார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

274.05

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு அவர்கள் திரும்பி வந்தபோது தண்ணீர் குவளையுடன் அவர்களைச் சந்தித்தேன். அவர்களின் (கை கால்கள்)மீது நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தம் (முன்) கைகளைக் கழுவிவிட்டுப் பிறகு முகத்தைக் கழுவினார்கள். பிறகு தம் முழங்கைகளைக் கழுவப்போனபோது அவர்கள் அணிந்திருந்த நீளங்கி குறுகலானதாக இருந்தது. எனவே, தம் கைகளை நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவினார்கள். மேலும், (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்; தம் காலுறைகள் மீதும் (அவ்வாறே ஈரக் கையால்) தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு எங்களுக்கு (இமாமாக நின்று) தொழுவித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

274.06

No translation available for this language.

274.07

No translation available for this language.

274.08

No translation available for this language.

274.09

No translation available for this language.

274.10

No translation available for this language.

274.11

No translation available for this language.

274.12

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்துகொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு முன் இயற்கைக்கடனை நிறைவேற்றுவதற்காக ஒதுக்குப் புறத்திற்குச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நான் ஒரு (தண்ணீர்)பாத்திரத்தை எடுத்துச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தேவையை முடித்துவிட்டு) என்னிடம் திரும்பி வந்தபோது பாத்திரத்திலிருந்த தண்ணீரை அவர்களுடைய கைகளில் ஊற்றினேன். அவர்கள் (மணிக்கட்டுவரை) மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் முகத்தைக் கழுவினார்கள். பிறகு (முழங்கைவரைக் கழுவுவதற்காகத்) தமது நீளங்கியை முழங்கைகளிலிருந்து வெளியிலெடுக்க முயன்றார்கள். நீளங்கியின் கைப் பகுதி இறுக்கமாக இருந்த காரணத்தால் தம் கைகளை நீளங்கியில் நுழைத்து நீளங்கியின் கீழேயிருந்து கைகளை வெளியில் எடுத்தார்கள். பிறகு கைகைளை மூட்டுவரை கழுவினார்கள். பிறகு (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக) இரு காலுறைகள்மீதும் ஈரக் கையால் தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள். பின்னர் (பள்ளிவாசலை நோக்கிச்) சென்றார்கள். நானும் அவர்களுடன் சென்றேன். அப்போது மக்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களைத் தொழுவிக்கச் சொல்லி (அவர்களுக்குப் பின்னால் நின்று) தொழுதுகொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அந்தத் தொழுகையின்) இரு ரக்அத்களில் ஒரு ரக்அத்தான் கிடைத்தது. எனவே, கிடைத்த அந்த இறுதி ரக்அத்தை மக்களுடன் சேர்ந்து தொழுதார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (தொழுகையை முடிப்பதற்காக) சலாம் கொடுத்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, (எஞ்சிய ஒரு ரக்அத்தைத் தொழுது) தமது தொழுகையை நிறைவு செய்தார்கள். இ(வ்வாறு நபியவர்களை முந்திக் கொண்டு தாங்கள் தொழுத)து, முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஆகவே, அவர்கள் பல முறை தஸ்பீஹ் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின் மக்களைப் பார்த்து, நீங்கள் செய்தது நல்லதுதான் அல்லது நீங்கள் செய்தது சரிதான் என்று குறித்த நேரத்தில் மக்கள் தொழுததைப் பாராட்டும் வகையில் கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், (நபி (ஸல்) அவர்கள் வந்ததும்) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களைப் பின்னுக்கு கொண்டுவர நான் நினைத்தேன். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் (தொழுவிக்கட்டும்)! என்று கூறினார்கள் என முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

274.13

No translation available for this language.