No translation available for this language.
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டேயிரு.. அதன் முடிச்சையும் (மூடியையும்) பையையும் (உறையையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்துவிடு.. (வராவிட்டால்) நீயே செலவழித்துக்கொள்” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! வுழிதவறி வந்த ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்டார். “அதை நீ பிடித்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது அல்லது உன் சகோதரனுக்குரியது அல்லது ஓநாய்க்குரியது” என்று சொன்னார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! வுழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். இதை கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்களின் ‘இரு கன்னங்களும்’ அல்லது ‘அவர்களது முகம்’ சிவந்து விட்டது. பிறகு ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? (நடப்பதற்கு) அதனுடன் கால்குளம்பும் (குடிப்பதற்கு) அதனுடன் தண்ணீர் பையும் (திமிலும்) உள்ளது. அதை அதன் உரிமையாளர் சந்திக்கும்வரை (சுயமாக அது வாழ்ந்துகொள்கிறது)’ என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
No translation available for this language.
No translation available for this language.
No translation available for this language.
மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வழிதவறி வந்த ஒட்டகத்தை பற்றிக் கேட்டார்’ என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அவற்றில் ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் அர்ரஃயு (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘இதைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் தம் கன்னங்கள் சிவக்குமளவுக்குக் கோபப்பட்டார்கள்’ என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், ‘அதன் உரிமையாளர் (அதை தேடிக்கொண்டு) வந்து, (நீ அதன் அடையாளத்தைப் பற்றி கேட்கும்போது) அவர் அதன் பையையும் எண்ணிக்கையையும் முடிச்சையும் (சரியாக) அறிந்திருந்தால் அவரிடம் அதைக் கொடுத்துவிடு. இல்லையேல், அது உனக்கே உரியது’ என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து....’ என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அதில், ‘இதைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகமும் நெற்றியும் சிவந்துவிட்டன. அவர்கள் கோபமடைந்தார்கள்’ என்று இடம்பெற்றுள்ளது. மேலும், ‘ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்’ என்பதற்குப் பிறகு ‘அதன் உரிமையாளர் வராவிட்டால் உன்னிடம் அது அடைப்கலமா இருக்கட்டும்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :