Sahih al Bukhari
2385

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்துகொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உன் ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறாய்? அதை நீ விற்பாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘ஆம் (விற்றுவிடுகிறேன்)” என்று சொன்னேன். அவ்வாறே நபி (ஸல்) அவர்களுக்கே அதை விற்றுவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தவுடன் மறுநாள் நான் அவர்களிடம் ஒட்டகத்துடன் சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்து விட்டார்கள்.2 அத்தியாயம் :