Sahih al Bukhari
1237

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனது இரட்சகனிடமிருந்து ஒரு (வான)வர் என்னிடம் வந்து ‘ஒரு செய்தியை’ அல்லது ‘ஒரு நற்செய்தியை’ எனக்கு அறிவித்தார். அதாவது ‘என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின் றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்று கூறினார் என்றார்கள். உடனே நான், “அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?” எனக் கேட்டேன். “அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான்” என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்.3 அத்தியாயம் :

1238

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாவது: “யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராக இறக்கிறாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்படியாயின்) “யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் மரணிக்கிறாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்” என நான் கூறுகிறேன். அத்தியாயம் :

1239

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களைத் தடை செய்தார்கள். ஜனாஸாவைப் பின்தொடரும்படியும், நோயாளியை நலம் விசாரிக்கும் படியும். விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவும்படியும், சலாமுக்குப் பதில் கூறும்படியும், தும்மியவ(ர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ எனக் கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ்- இறைவன் உங்களுக்குக் கருணை புரிவானாக! என) மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், (ஆண்கள்) தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் (கலப்படமில்லாத) பட்டு, அலங்காரப் பட்டு, ‘கஸ்’ எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதிலிருந்தும் எங்களைத் தடை செய்தார்கள்.4 அத்தியாயம் :

1240

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக் குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: சலாமுக்குப் பதிலுரைப் பது, நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸாவைப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

1241

No translation available for this language.

1242

No translation available for this language.

1243

நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்தி ருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதை அறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்தபோது, உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் எங்கள் பொறுப்பில் வந்தார்கள். அதன்படி அவரை நாங்கள் எங்கள் வீட்டில் தங்கவைத்தோம். பிறகு அவர் நோயுற்று அந்த நோயிலேயே இறந்தும்போனார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிடப் பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), “ஸாயிபின் தந்தையே! உம்மீது இறை யருள் பொழியட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கி றேன்” எனக் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தி யுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ் வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?” என நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “இவர் இறந்துவிட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவருக்கு நன்மையையே நான் எதிர்பார்க்கின்றேன். ஆயினும், நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், என்னிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்து கொள்ளப்படும் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற் குப் பிறகு நான் யாரையும் தூய்மையான வர் என்று ஒருபோதும் கூறுவதேயில்லை. இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் நாஃபிஉ பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் இறைத்தூராக இருந்தும், அவரிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பது எனக்குத் தெரியாது” என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

1244

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (உஹுத் போரில்) கொல்லப்பட்டுக் கிடந்தபோது, நான் அழுது கொண்டே அவரது முகத்தின் மீதிருந்த துணியை அகற்றலானேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார் கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை. பிறகு எனது மாமி ஃபாத்திமா (ரலி) அவர்களும் அழ ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது, “நீங்கள் அழுதாலும் அழாவிட்டாலும் நீங்கள் அவரைத் தூக்கும்வரை வானவர்கள் அவருக்குத் தங்களின் இறக்கைகளால் தொடர்ந்து நிழல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

1245

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (அபிசீனிய மன்னர் நஜாஷீ (நீகஸ்) இறந்த அன்றே அவரது மரணச் செய்தியை (மக்க ளுக்கு) அறிவித்தார்கள். பிறகு தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மக்களை வரிசைப்படுத்தி நிற்கவைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸா தொழுகை நடத்தி)னார்கள். அத்தியாயம் :

1246

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(மூத்தா போரில்) ஸைத் (ரலி) கொடியைப் பற்றியிருந்தார். அவர் கொல்லப் பட்டார். பிறகு அதை ஜஅஃபர் (ரலி) பற்றினார். அவரும் கொல்லப்பட்டார். பிறகு அதை அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) பற்றினார். பிறகு அவரும் கொல் லப்பட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. “பிறகு, (ஏற்கெனவே) நியமிக்கப்படா திருந்த காலித் பின் வலீத் (ரலி) அக் கொடியைப் பற்றினார். அவருக்கே வெற்றி கிடைத்தது” என்றும் நபியவர்கள் கூறினார்கள்.6 அத்தியாயம் :

Previous section
Page 1 of 16
Next section