Sahih al Bukhari
948

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கடைத்தெருவில் விற்பனை செய்யப் பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலைபேச முற்பட்டார்கள். அதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போதும் (அணிந்து) அலங்கரித்துக்கொள்ளலாமே!” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ் வுலக) ஆடையாகும்” என்று கூறினார்கள். (பிறகு என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் நாடிய நாட்கள்வரை (இது பற்றி ஏதும் கேட்காமல் பொறுமை யாக) இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீளங்கி ஒன்றைக் கொடுத் தனுப்பினார்கள். அதைப் பெற்றுக்கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ‘இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை’ என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதை நீங்கள் விற்றுவிடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்)” என்று கூறினார்கள். அத்தியாயம் :

949

No translation available for this language.

950

No translation available for this language.

951

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) உரையாற்றியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது உரையில்) “நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுவ தாகும். பிறகு திரும்பி வந்து ‘குர்பானி’ பிராணிகளை அறுப்பதாகும். யார் (இதைச்) செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார்” என்று கூறி னார்கள். அத்தியாயம் :

952

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரு அன்சாரிச் சிறுமியர் ‘புஆஸ்’ போர் நாளில் அன்சாரிகள் (ஒருவரை யொருவர் தாக்கியும் தூக்கியும்) பாடிய பாடல்களை (சலங்கையில்லா கஞ்சிராக்களை அடித்தபடி) பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். -(உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர்.- (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் தினத்திலாகும். அப்போது (படுத்துக்கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்) அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

953

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) தினத் தில் சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் (தொழுகைக்குப்) புறப்படமாட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள்” என்று வந்துள்ளது. அத்தியாயம் :

954

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஈதுல் அள்ஹா பெருநாள் அன்று) நபி (ஸல்) அவர்கள், “யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் (அபூபுர்தா) எழுந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) இது, இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்” என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டைவீட்டார் சிலர் (உடைய தேவை) பற்றி(யும் அதனாலேயே தாம் தொழு கைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். அவர் சொன்ன காரணத்தை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டதைப் போன்று தெரிந்தது. மேலும் அவர், “என்னிடம் இறைச்சி ஆடுகள் இரண்டைவிட நான் பெரிதும் விரும்பும் ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாடு) ஒன்று உள்ளது. (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா?)” என்று கேட்க, நபி (ஸல்) அவர்களும் அவருக்கு அனுமதியளித்தார்கள்.3 இந்த அனுமதி அவரல்லாதவருக்கும் பொருந்துமா? அல்லது பொருந்தாதா? என்பது எனக்குத் தெரியாது. அத்தியாயம் :

955

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெருநாளன்று எங்களுக்குத் தொழுகைக்குப்பின் உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்) “யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நமது குர்பானியைப் போன்று குர்பானி கொடுக்கிறாரோ அவரே (குர்பானி) வழிபாட்டை (முறைப்படி) முடித்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டாரோ அது தொழுகைக்கு முன்புள்ளதாகும். அவரது குர்பானிவழிபாடு நிறைவேறாது” என்று கூறினார்கள். அப்போது என் தாய்மாமன் அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்றைய தினம் உண்பதற்கும் குடிப்பதற்கும் உரிய நாள் என்று அறிந்தேன். எனது வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் எனது ஆடே முதல் ஆடாக இருக்க வேண்டும் எனவும் நான் விரும்பினேன் ஆகவே, (பெருநாள்) தொழுகைக்கு வருவதற்கு முன்பே நான் அறுத்துவிட்டேன். காலைச் சிற்றுண்டியாக வும் (அதை) உட்கொண்டும்விட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நீர் அறுத்த) உமது ஆடு இறைச்சி(க்காக அறுக்கப்பட்ட) ஆடு என்றே கருதப்படும்” என்று கூறினார்கள். அதற்கு அபூபுர்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் ஒரு வயதுடைய பெட்டை வெள்ளாடு ஒன்று உள்ளது. அது (கொழுத்திருப்பதால்) இரண்டு ஆடுகளை விட எனக்கு மிகவும் விருப்பமானதாகும். அ(தை நான் அறுப்ப)து எனக்குப் போதுமாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம் (உமக்கு மட்டும் அது போதுமாகும்.) உமக்குப் பிறகு வேறெவருக்கும் ஒருபோதும் அது போதுமாகாது” என்று கூறினார்கள். அத்தியாயம் :

956

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிவாச-ல் தொழாமல்) திடலுக்குப் புறப்பட்டுச் செல்பவர்களாக இருந்தார்கள். அங்கு அவர்கள் செய்யும் முதல்வேலை தொழுவதேயாகும். (தொழுகை முடிந்த) பின்னர் மக்களை முன்னோக்கி எழுந்து நிற்பார்கள். மக்கள் அனைவரும் அப்படியே தத்தம் வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள். அப்போது மக்களுக்கு அவர்கள் உபதேசம் புரிவார்கள்; (வ-யுறுத்த வேண்டியதை) அவர்களுக்கு வ-யுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டி யதை) அவர்களுக்குக் கட்டளையிடு வார்கள். (ஏதேனும் ஒரு பகுதிக்கு) படைப் பிரிவுகளை அனுப்ப நினைத்திருந்தால் அனுப்பிவைப்பார்கள். அல்லது எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந் தால் உத்தரவிடுவார்கள். (இவற்றை முடித்த) பின்னரே (மதீனாவுக்கு) திரும்பிச் செல்வார்கள். இவ்வாறே மக்கள் செயல்பட்டு வந்தனர்; மதீனாவின் ஆளுநராக மர்வான் பின் ஹகம் ஆகும்வரை. அவருடன் ஒரு ஹஜ்ஜுப் பெருநாளிலோ அல்லது நோன்புப் பெருநாளிலோ நான் (தொழச்) சென்றேன். நாங்கள் தொழும் திடலுக்கு வந்தபோது கஸீர் பின் ஸல்த் அவர்கள் உருவாக்கிய சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்று அங்கே தீடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் (பெருநாள் தொழுகையைத்) தொழுவிப்பதற்கு முன்பே சொற்பொழிவு மேடையில் ஏறப்போனார். உடனே நான் (முத-ல் தொழுவித்துவிட்டுப் பிறகு உரையாற்றும்படி கோர) அவரது ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் (சொற்பொழிவு மேடையில்) ஏறித் தொழுகைக்கு முன்பே உரை (குத்பா) நிகழ்த்தலானார். அப்போது நான் அவரிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிவழியை) மாற்றிவிட்டீர்கள்” என்று சொன்னேன். அதற்கு மர்வான், “அபூசயீதே! நீங்கள் அறிந்திருக்கும் (அந்த) நடைமுறை மலையேறிவிட்டது” என்று சொன்னார். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்திருக்கும் (நபியவர்களின்) நடைமுறைதான் நான் அறியாத (இந்தப் புதிய) நடைமுறையைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னேன். அதற்கு மர்வான், “மக்கள் தொழுகை முடிந்துவிட்டால் எம(து உரை)க்காக அமர்ந்துகொண்டிருக்கமாட்டார்கள். எனவே, நான் உரையைத் தொழுகைக்கு முன்பே வைத்துக்கொண்டேன்” என்று சொன்னார். அத்தியாயம் :

957

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்புப் பெருநாளிலும் (முத-ல்) தொழுவார்கள். தொழுகையை முடித்தபிறகே உரை (குத்பா) நிகழ்த்துவார்கள். அத்தியாயம் :

Previous section
Page 1 of 5
Next section